விளையாட்டு

விஸ்டனின் இருபதுக்கு- 20 கனவு அணியில் மலிங்கவுக்கு இடம்

(UTVNEWS | LONDON) –விஸ்டன் வெளியிட்டுள்ள கடந்த பத்து ஆண்டுகளுக்கான இருபதுக்கு- 20 கிரிக்கெட் கனவு அணியில், இலங்கை வீரர் லசித் மலிங்க இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் பட்டியல் உள்ளிட்டவை விஸ்டன் புத்தகத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், இந்த பத்தாண்டுகளுக்கான இருபதுக்கு- 20 அணியை விஸ்டன் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பாக கேப்டன் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பின்ச், ஷேன் வாட்சன், மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணியின் முஹமட் நபி, ரஷீத் கான் நியூசிலாந்து அணியின் கொலின் மன்ரோ இங்லாந்து அணியின் ஜோஸ் பட்லர்,டேவிட் வெல்லி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். எம்.எஸ். தோனி இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

Related posts

சர்வதேச நடுவர் வாழ்வுக்கு Bruce Oxenford முற்றுப்புள்ளி

கோஹ்லியால் இந்த சாதனையை செய்ய முடியுமா?

ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்