கேளிக்கை

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

(UTV|INDIA) நடிகர் விஷாலும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவும் காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர்.

இவர்களது திருமணம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விஷாலிடம் கேட்டதற்கு திருமண திகதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தனது திருமணம் சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்

ஓல்கா’வை துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தில் கரைத்த காதலன்

கணவருக்கு ஜெனிலியா எழுதிய உருக்கமான கடிதம்…