உள்நாடு

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

editor

கொரோனா : போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்

ஜனாதிபதி அநுர தொடர்பாக அவதூறு கருத்து – நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி

editor