உள்நாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி அளித்துள்ளது.

மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், குறித்த காணியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) இல்லை

editor