உள்நாடு

விரைவில் எதிர்க்கட்சிகளின் புதிய முன்னணி

(UTV | கொழும்பு) – டலஸ் அழகப்பெரும விமல் வீரவன்சவை முன்னணியாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் புதிய முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்துடன் எந்த பயணமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் சில பதவிகளுக்கு எதிர்க்கட்சிகள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்களது கட்சிகளுக்கு அவ்வாறான அழைப்புகள் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பதவிகளைப் பெற்றாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பெண் ஒருவர் தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், எதிர்க்கட்சியில் இருப்பதால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Related posts

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து சுமந்திரன் செயற்படுவார்

editor

இன்றும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்