உலகம்

விமான விபத்தில் 19 பேர் பலி

(UTV |  தன்சானியா) – தன்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக, குறித்த விமானம் புகோபா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணம் செய்த 26 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor

1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது: இஸ்ரேல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்