உள்நாடு

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவதற்கு எதிராக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் விடுவது அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்க விடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு மற்றும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எடுத்துரைத்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக அஷ்ரப் நியமனம்

editor

மாணவர்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!