கிசு கிசு

விமானம் பறக்க பணம் செலுத்தினால் மாத்திரமே தொடர்ந்தும் எரிபொருள்

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பணத்தினை செலுத்தினால் மாத்திரமே தொடர்ந்தும் எரிபொருளை வழங்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடும் தீர்மானத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு மின் உற்பத்தி நிலையமும் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அதற்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமையே காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கும் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

Related posts

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்ட முதலாவது பிறந்த நாள்

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அன்டோனியோ குட்டேரஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை