உள்நாடு

விபத்துக்குள்ளான ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம் ஆணமடுவ, தோனிகல பகுதியில் நெற்று (11) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த மோட்டார் வாகனம் ரங்கே பண்டாரவின் மகனான யசோத நெதக ரங்கே பண்டாரவின் பெயரில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் வாகனம் புத்தளத்தில் இருந்து ஆணமடுவ நோக்கிய பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்டதன் பின்னர் மோட்டார் வாகன ஓட்டுனர் மற்றும் டிப்பர் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனுக்கள் – விசாரிக்க உயர் நீதி மன்றம் தீர்மானம்

editor

அசுத்தமான குளியலறை, சிறிய சிறைக்கூண்டு பூச்சிச் தொல்லை சிறையில் அவஸ்தைப்படும் இம்ரான்கான்!