முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) இடம்பெற்ற இந்த விபத்து, இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ளது.
முலனகந்த பகுதியில் இருந்து சமகி மாவத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
