உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய பேருந்து – 15 பேர் காயம்

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இன்று (16) முற்பகல் நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் நியமனம்

editor

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது – கூடுகிறது உயர் சபை

editor

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்