உள்நாடு

விடுதி அறையில் மாணவி தற்கொலை – காரணம் என்ன?

வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கண்டி தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனி குமாரி என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டார்.

சஞ்சீவனி இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டியின் தெல்தெனிய பகுதியிலிருந்து வயம்ப தேசிய கல்விக் கல்லூரிக்கு வந்துள்ளார்.

ஆனால் தனது கல்வி காலத்தை நிறைவு செய்வதற்குள், அவர் இவ்வாறு தற்கொலை முடிவை நோக்கிச் சென்றுள்ளார்.

அவர் யாருக்கும் தெரியாத வகையில் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி ஆசிரியர்களால் அவள் அனுபவித்த துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய நண்பிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது போன்ற மரணங்கள் இனியும் இடம்பெறுவதை தடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவர்கள் நேற்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பீடத்தின் பீடாதிபதி வர வேண்டும் என்று கோரி, இரவு வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கில் அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

editor

பாடசாலை மாணவி கடத்தலுக்கான அதிர்ச்சி காரணம் வௌியானது – வீடியோ

editor