வகைப்படுத்தப்படாத

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான காணி வழங்கலின் போது, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நேற்றையதினம் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி வழங்கலின் போது ஒரு சமுகத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், புதிதாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கத்தின் துணையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து, வடமாகாண சபை உறுப்பினர்களும், தமிழ் சமுகப் பிரதிநிதிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

முன்னதாக, முல்லைத்தீவில் காணி வழங்கலின் போது விகிதார கொள்கை பின்பற்றப்படலாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார்.

இது தொடர்பில் விவாதம் இடம்பெற்ற வேளையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேறி நீண்டகாலமாகியுள்ள போதும், மக்களின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாதிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தினார்.

இந்தநிலையில், அனைத்து மக்களதும் காணிப் பிரச்சினைகளை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

Related posts

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’

Mandla Maseko: Would-be African astronaut dies in road crash

கொழும்பில் அதிக மழை