உள்நாடு

வாழைத்தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்தே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அங்கிருந்து 29 தோட்டாக்களைக் கொண்ட வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கியை அந்த இடத்திற்குக் கொண்டு வந்து போட்ட சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

editor

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாமல்

editor

ஒரே நாளில் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு

editor