உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் இருபத்தைந்து (25) விவசாய அமைப்பு பிரிவில் இருபத்திரெண்டாயிரத்தி இருநூற்றி இருபத்தைந்து (22225) ஏக்கர் வயல்கள்செய்யப்பட்டிருந்த போதும்; இன்று திங்கள்கிழமை (01.12.2025) வரை பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக விவசாய அமைப்புக்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

விவசாய பகுதிகளில் குளங்களின் அணைக்கட்டுக்கள் உடைந்துள்ளதுடன் மரங்கள் விழுந்தும் வீதிகள் சேதமடைந்தும் மின்சார கம்பங்களும் விழுந்து காணப்படுகின்றன.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

Related posts

மலானி பொன்சேகாவின் மறைவு நாட்டிற்கும் திரைப்படத் துறைக்கும் பாரிய இழப்பாகும் – சஜித் பிரேமதாச

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம்

பொலிஸ் தலைமையகத்தினால் விசேட அறிவித்தல்