உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் மீட்பு

பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சடலம் செவ்வாய்க்கிழமை (30) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா வீதி வாழைச்சேனை ஆற்றில் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை தமிழ் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

லொறியின் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலி

editor

வெளிநாட்டு தபால், பொருட்கள் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைது