உள்நாடு

வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டம் ஆரம்பம்

பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!