உள்நாடு

வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

(UTV | கொழும்பு) – வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து திலகரத்ன பண்டார திசாநாயக்கவை நீக்கும் அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரால் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் திலகரத்ன பண்டார, வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

‘ரட்டா’ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை