சூடான செய்திகள் 1

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO ) – வாரியபொல – குருநாகல் பிரதான வீதியில் இமியங்கொட சந்திக்கு அருகே ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் காரும் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு(02) இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் காரின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்

பிரபல சிங்கள பாடகர் பிணையில் விடுதலை