வகைப்படுத்தப்படாத

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டெயக் மற்றும் காராபாக் மாவட்டங்களில்
தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த பகுதிகளில் இருந்த 35 கிளர்ச்சியாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

Related posts

சிரியாவில் 9 பேர் பலி

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்…

ධවලමන්දිරයටත් ගංවතුර