வகைப்படுத்தப்படாத

வானிலை எதிர்வுகூறலுக்கு நவீன இரு ராடர்கள்

(UDHAYAM, COLOMBO) – வானிலை எதிர்வுகூரலை செயற்றிறன் வாய்ந்ததாக மாற்றுவதற்கு நவீன வகையை சேர்ந்த இரு ராடர்கள் பொருத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை தெரிவித்தார்.

2007ம் ஆண்டு 20 கோடி ரூபா செலவில் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட டொப்லர் ராடர் கருவிகள் ஏன் இன்னமும் பொருத்தப்படவில்லை என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பரவலாக பேசப்படும் டொப்லர் ராடர் கருவிகளை விட சிறப்பான ராடர்களை பொருத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

நாளை முதல் மழை குறைவடையலாம்

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

‘Chaos’ as Hong Kong Police and protesters clash