உள்நாடுபிராந்தியம்

வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் பலி – மருதமுனையில் சம்பவம்

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு   இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என்ற  குடும்பஸ்தரே குறித்த மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவருக்கும் அவருடைய முன் வீட்டில் வசித்து வந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக  மாறியதில் கூரிய ஆயுதங்களினால்   தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த்து.

-பாறுக் ஷிஹான்

Related posts

மேலும் 37 பேர் பூரண குணம்

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு