சூடான செய்திகள் 1

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்கு முன்னதாக நிறைவுசெய்ய முடியும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் பாதுகாப்புடன் இந்தப் பணிகள் இடம்பெறுவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு கோடியே 70 இலட்சம் அளவான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்காலத்தில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்-வைத்தியர் ஷாபியின் விசேட குரல் பதிவு (video)

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

சதொச நிறுவனத்தை உடைத்த மூவர் கைது