உள்நாடு

வாகன இறக்குமதி வருவாய் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

இன்று (20) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Related posts

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் கைது

editor

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – அநுர

editor