வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவனின் மரணம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அநுராதபுரம் யசசிறிபுர பகுதியைச் சேர்ந்த சச்சித்ரா நிர்மல் என்ற 21 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா கூறுகிறார்.
