உள்நாடுபிராந்தியம்

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் பலி – மூவர் படுகாயம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று (26) அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் சச்சிதானந்த பிரபாகர குருக்கள் (வயது 52) என்பவர் உயிரிழந்ததோடு, அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி (வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தீபன்

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை – மகிந்த அமரவீர கோரிக்கை.

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம் – தலதா அத்துகோரள

editor