உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – 23 வயதுடைய இளைஞன் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

நுவரெலியாவில் பனிக்கட்டிகள் விழுகின்றன

editor

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VIP முனையத்தில் துப்பாக்கி வெடிப்பு!