கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று (1) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தவிபத்தில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா-மன்னார் பிரதான வீதியின் ஊடாக பொருத்தப்பட்டிருந்த ரயில் கடவை செயல்படாமை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
லொறி, ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது ரயில் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சிறிய ரக லொறியில் பயணித்த தந்தை, தாய் மற்றும் 4 வயது சிறுமி ஆகியோர் இந்த விபத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.