உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

வவுனியா யாழ். வீதியில் வேன் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பஸ் நிலையத்திற்கு அண்மையில் இன்று (04) காலை இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் வவுனியா யாழ். வீதியில் புதிய பஸ் நிலையம் முன்பாக சென்று கொண்டிருந்த போது வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

உளமார்ந்த நன்றிகள் – புதிய எம்.பியாக தெரிவு செய்யப்பட்ட அஷ்ரப் தாஹிர்

editor

ஜனாதிபதி – கூட்டமைப்பு இடையே சந்திப்பு

சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக ஹரிப் பிரதாப் நியமனம்

editor