உள்நாடு

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளது.

மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவது,

கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்ற போது கால் தவறி குளத்திற்குள் இளைஞன் விழுந்துள்ளார்.

இதனையடுத்து, ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். எனினும் மூன்றுநாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் அந்த குளத்தில் இருந்து இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

Clean Sri Lanka வின் கீழ் நகர பசுமை வலய வேலைத்திட்டம்

editor

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 9 பேர் காயம்