உள்நாடு

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!

(UTV | கொழும்பு) –

வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 450 குடும்பங்களை சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்கா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்தகல் கிராமத்தில் 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுவதனால் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது. விரைவில் குடிநீர் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டியது.

editor

அருவக்காடு குப்பை திட்டத்தை மீண்டும் விரைவில் ஆரம்பிக்கத் திட்டம் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை

இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்