உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண தொழில் துறை வர்த்தக சந்தை!

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிலில் துறை வர்த்தகசந்தை வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (26.09) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏஇசரத்சந்திர நிகழ்வை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இச்சந்தையில் உள்ளூர் உற்பத்திகள் உட்பட 50 ற்கும் மேற்ப்பட்ட விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக நாளையதினமும் (27.09) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தொழில் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வவுனியா மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவுநேர பொழுதுபோக்குகள் முக்கிய பங்கு – டயானா கமகே