வகைப்படுத்தப்படாத

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பதுளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இவ்வாறு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புகையிரத மலசலகூடத்தில் குடும்பஸ்தரின் சடலம்

BAR briefed on SOFA, MCC & Land Act

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு