உள்நாடுபிராந்தியம்

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்த 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜா-எல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) மாலை ஜா-எல நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – யாரையும் பழிவாங்கும் தேவை எங்களுக்கு இல்லை – ஜனாதிபதி அநுர

editor

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு