சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

(UTV|COLOMBO)-மாவனல்லைப் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாவனல்லை நகரத்தில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக கட்டிடங்களில் இன்று அதிகாலை இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை

பாணின் விலை இன்று முதல் அதிகரிப்பு

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்