சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் நாளை…

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பது குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை இரவு விசேட கலந்துரையாடடில் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் புறக்கணித்தனர்.

எனினும் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து, அவ்வாறான தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் அரசியல் வட்டார தகல்கள் தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்

ஹெரோயினுடன் ஒருவர் கைது