கிசு கிசு

‘வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்பு’

(UTV | கொழும்பு) – வரவு செலவுத் திட்ட திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (SLPP) ஆகிய புதிய முகங்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுமார் 30 அமைச்சரவை அமைச்சர்களும், 40 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30 ஆம் திகதி செவ்வாய்கிழமை வரவு செலவுத் திருத்த உரையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.

Related posts

பிரித்தானிய மன்னராக முடிசூட நீ உயிருடன் இருக்கமாட்டாய்?

மேலும் இரு மரணங்கள் : PCR முடிவுகள் பிற்பகலில் வெளியாகும்

சந்திமால் – பியூமி : கொரோனா கொத்தணி?