வகைப்படுத்தப்படாத

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தண்ணீர் பவுசர்களைப் பெற்றுக்கொடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்த தண்ணீர் பவுசர்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக 25 பவுசர்கள் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது.

வரட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 83 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 1,80,000 குடும்பங்களுக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

களுத்துறை, குருணாகலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு இந்த பவுசர்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் தினேஷ் கன்கந்த, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேநேரம் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட நச்சுத்தன்மை அற்ற உணவுப்பொருட்ளை விற்பனைசெய்யும் நடமாடும் வாகனத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

Related posts

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து

Plane crash at Texas Airport kills 10

நெதர்லாந்து தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது