வகைப்படுத்தப்படாத

வயிற்று வலி எனக்கூறி சிகிச்சைக்கு வந்த நபரின் வயிற்றில் 10 கிலோ எடையுடைய கட்டி!

(UDHAYAM, COLOMBO) – சத்திரசிகிச்சையொன்றில் நபரொருவரின் வயிற்றில் இருந்து 10 கிலோ எடையுடைய கட்டியொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

தம்புள்ளை மருத்துவமனையில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய எம்.பி.சேனாநாயக்க என்ற நபரின் வயிற்றில் இருந்தே இந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.

அவர் கடந்த தினத்தில ்வயிற்று வலி காரணமாக தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.

அதன்படி , அவர் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ,குறித்த நபரின் இடது சிறுநீரகத்திற்கு அருகில் வயிற்றில் பாரிய கட்டியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , தம்புள்ளை மருத்துவனையின் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழுவால் இன்றைய தினம் தம்புள்ளை மருத்துவமனையின் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் , சத்திரசிகிச்சையில் சுமார் பத்து கிலோ எடையுடைய குறித்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ள நிலையில் , குறித்த நபர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டி ஏற்பட்ட முறை மற்றும் அதில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய அதனை ஆய்வகத்திற்கு அனுப்பு தீர்மானித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

உலக நுகர்வோர் தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Water cut for several areas on Friday

US brings in new fast-track deportation rule