வகைப்படுத்தப்படாத

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை! 3 கைகள் ; தாய்க்கு ஏற்பட்ட சோகம்.. -காணொளி

(UDHAYAM, COLOMBO) – ராஜஸ்தானில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றினர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்தது.

வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை பார்த்த தாய் வேதனையின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

குழந்தைக்கு வயிற்றிலும் ஒரு தலை இருந்ததுதான் தாயின் சோகத்திற்குக் காரணம்.

சோகத்தில் இருந்த அவரை சமாதானப்படுத்திய மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கையூட்டியுள்ளனர்.

அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாம், இரட்டை குழந்தை என தெரிவித்திருக்கின்றன.

இதனால் அப்பெண் மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

ஆனால் குழந்தை பிறந்தபோது ஒரு குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்ததாகவும், மற்றொரு குழந்தைக்கு தலை மற்றும் சில உறுப்புகளுடன் முழுமையான வளர்ச்சி பெறாமல் இரண்டும் ஒட்டியே பிறந்திருக்கின்றன.

இதனால் குழந்தையின் உருவமானது, 3 கைகளுடன் வயிற்றிலும் ஒரு தலையுடன் காணப்பட்டிருக்கிறது.

மருத்தவர்கள் அக்குழந்தைக்கு 4 மணி நேரம் அறுவை சிசிக்சை செய்து வளர்ச்சியடையாத தலையை அகற்றிவிட்டனர்.

தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், விரைவில் குழந்தை வீடு திரும்பும் என்று நம்பிக்கை கூறியுள்ளனர்.

[ot-video][/ot-video]

Related posts

Momoa leads Netflix’s “Sweet Girl” film

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

Special Traffic Division for Western Province – South soon