உள்நாடுபிராந்தியம்

வயலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பஸ் ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த பஸ்ஸானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது.

குறித்த பஸ் அண்ணளவாக 10-15 kmh வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலில் விழுந்தது.

இருப்பினும் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்தும் ஏற்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 351 பேர் கைது

மினி இராணுவ முகாம் அகற்றம்

IMF இணக்கப்பாட்டை பின் தொடர்வதால் மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் – சஜித் பிரேமதாச

editor