அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வன்னி எம்.பிக்களை அவசரமாக அழைத்துள்ள ஜனாதிபதி அநுர

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவசரமாக நாளைய தினம் (13) சந்திக்க அழைத்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சந்திப்பு மன்னாரில் நடைபெற்று வரும் காற்றாலை மின் கோபுர திட்டம் தொடர்பான விவாதத்தையே மையமாகக் கொண்டதாகும்.

இதில் வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மன்னாரில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் கோபுர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 10 நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காணிகளை பிழையாக அபகரித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் – சாணக்கியன்.

பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர்.லத்தீப் இன்றுடன் ஓய்வு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு