சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

(UTV|COLOMBO)இன்று (14) வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

புகையிரத பயணத்தில் தாமதம்

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்