வகைப்படுத்தப்படாத

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சபையில்..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை எதிர்வரும் 14ம் திகதி சபையில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

இந்த அறிக்கை இன்று முதலமைச்சரால் மாகாண சபையின் விசேட அமர்வில் முன்வைக்கப்பட்டது.

பின்னர் விவாதத்துக்கு திகதி ஒதுக்குவது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களிடையே இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர், 14ம் திகதி அதனை விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Update : நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் பலி

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்

Enterprise SL Exhibition in Anuradhapura today