சூடான செய்திகள் 1

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக ‘பனை நிதியம்’ என்ற புதிய திட்டம்

(UTV|COLOMBO) இன்று(27) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு கிழக்கு அபிவிருத்தியை மையமாக கொண்ட ‘பனை நிதியம்’ என்ற திட்டம்  அலரிமாளிகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக குறித்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏலவே அங்கு உள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்க தீர்மானித்துள்ளது.

 

Related posts

மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ்

2018 தொலைக்காட்சி, கலை அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்…

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு