வகைப்படுத்தப்படாத

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சியிலும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் நிர்வாக முடக்கல் போராட்டத்தின் இடைநடுவே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிழக்கு மாகாணத்திலும் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Brazil jail riot leaves at least 57 dead

இன்று வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය