வகைப்படுத்தப்படாத

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக சேவையின் ஒரு பகுதியாக ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படை சமூக பொறுப்பு நிதியத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவினால் நிறுவப்பட்டது.

நாடு முழுவதும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 191 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 90,646 குடுமபங்களும் மற்றும் 70,200 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர்.

இதேவேளை, அண்மையில் மேலும் 5 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தம்புள்ள தம்பதெனிய கிராமத்திலும் அனுராதபுரம் குடகம, ஹல்மில்லவ மற்றும் மயிங்கமுவ பிரதேசத்திலும் புத்தளம் தப்போவ மற்றும் மெதிரிகிரிய திச்சபுற ஆகிய பிரதேசங்களிலும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ස්ටර්ලින් පවුමේ අගය පහළට

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி

California hit by biggest earthquake in 20-years