வகைப்படுத்தப்படாத

வடகொரியத் தலைவரை வெள்ளிமாளிகைக்கு அழைக்க தயராகும் அமெரிக்க ஜனாதிபதி

(UTV|NORTH KOREA)-வடகொரியத் தலைவரை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அழைக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இந்த மாதம் வடகொரிய தலைவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தால், வடகொரிய தலைவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், வடகொரிய தலைவருக்கு எதிராக எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் நட்புரீதியாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லண்டன் விமானநிலையம் திடீரென மூடப்பட்டது

Presidential Comm. report on SriLankan, Mihin tomorrow

எம்பி’க்களுக்கான ஆடம்பர வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்