டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும்.
இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.