வகைப்படுத்தப்படாத

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்பிரதேசங்களை தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில பிரதேசங்களில் பலத்த மழை மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுத் இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்களிடம் காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Princess Haya: Dubai ruler’s wife in UK ‘in fear of her life’

நிலநடுக்கம் – 5.2 ரிக்டரில் பதிவு

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்